வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (14:36 IST)

சந்தைகளில் விற்கப்படும் பாலியல் பலாத்கார வீடியோக்கள்

சந்தைகளில் விற்கப்படும் பாலியல் பலாத்கார வீடியோக்கள்

உத்திர பிரதேச மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்கார வீடியோக்கள் தினமும் நகர்புற சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.


 

 
உத்திர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பாலியல் பலாத்காரத்தின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், பாலியல் பலாத்காரம் வீடியோக்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது
 
இந்த வீடியோக்கள் 30 வினாடிகள் முதல் 5 நிமிடங்கள் வரை இருக்கின்றன. இது ரூ:50 முதல் ரூ:150 வரை விற்கப்படுகின்றன. ஆக்ரா, மீரட், பேரலி ஆகிய பகுதிகளில் இந்த வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
 
கடந்த வாரம் இதேபோல் ஒரு பெண்ணின் வீடியோ இணையதளத்தில் வெளியானதால், அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் பாலியல் குற்றவாளி அந்த பெண்ணின் நிர்வாண படத்தை அச்சிட்டு ரூ:3க்கு விற்பனை செய்துள்ளார்.