Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த வாலிபர் - சுவாரஸ்ய பின்னணி


Murugan| Last Updated: புதன், 29 மார்ச் 2017 (19:08 IST)
குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தை பெறுவதற்காக, தான் காதலித்த பெண்ணை ஒரு வாலிபர் நான்கு முறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

 

 
பயாஸ் என்ற வாலிபர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அதேபோல் அங்கிதா என்ற பெண் இந்து மதத்தை சேர்ந்தவர். அவர்கள் இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டினரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
 
மேலும், பயாஸ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் நான்கு திருமணம் செய்து கொள்ள அவரின் மதம அவரை அனுமதிக்கிறது.எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர் தலாக் கூறிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என அங்கிதா விட்டினர் கூறி வந்தனர்.


 

 
ஆனால், தங்கள் காதலில் உறுதியாக இருந்த காதலர்கள் இருவரும், எப்படியாவது தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது இந்து மதப்படி கோவிலில் ஒரு திருமணம். அதன்பின் நீதிமன்றத்தில் சட்டப்படி ஒரு திருமணம், இஸ்லாம் முறைப்படி ஒரு திருமணம், கோவாவில் நண்பர்களின் முன்னிலையில் ஒரு திருமணம் என பயாஸ், அங்கிதாவை நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். எனவே, இனி தலாக் கூற முடியாது. இனிமேலாவது எங்களை நம்புங்கள் என கூற, இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்து விட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :