வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 27 மே 2015 (22:33 IST)

கேட்ஜெட் சாதனங்களை வாங்க விபச்சாரத்தில் ஈடுபட்ட 13 வயது சிறுமி

வதோதராவில் கேட்ஜெட் சாதனங்களை வாங்க 13 வயது சிறுமி விபச்சாரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் சுபன்புரா பகுதியில் மரக்கன்றுகள் விற்கும் கடை வைத்திருக்கும் பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன் தனது 13 வயது மகள் வாந்தியெடுத்ததை பார்த்து பதற்றமடைந்தார். இதற்கு தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக அவரது மகள் சொன்னதும் அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
 
பின் அந்த சிறுமியிடம் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக பல ஆண்களுடன் அவள் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. இதற்கு தனியாக ஒரு மொபைல் போன் வைத்திருந்த அந்த சிறுமி, நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சிறுமிக்கு 'அபயம்' என்ற அமைப்பு மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
 
சிறுமியின் தந்தை இறந்து 3 வருடங்கள் ஆன நிலையில், அவளது தாய் எவ்வளவு கஷ்டபட்டு அவளை வளர்க்கிறார் என்பதை கவுன்சிலிங் கொடுத்தவர்கள் அவருக்கு விளக்கி புரிய வைத்தனர். எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்ட போது கேட்ஜெட் சாதனஙங்கள் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டது. அதனால் தான் இப்படி செய்ததாக கூறிய சிறுமியின் பதில் கவுன்சிலிங் கொடுத்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அறையில் நடந்த பரிசோதனையில் பல விலையுயர்ந்த கேட்ஜெட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.