செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 14 அக்டோபர் 2015 (05:46 IST)

போலி பட்டம் பெற்ற பாஜக அமைச்சர்

குஜராத் மாநில சுகாதாரத்துறை இணையமைச்சர் சங்கர் சவுத்ரி போலி எம்.பி.ஏ. பட்டம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

 
குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை இணையமைச்சராக இருப்பவர் சங்கர் சவுத்ரி.
 
இவர் கடந்த 2011 ஆம் வருடம் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 2012ஆம் வருடம் வதோதராவில் உள்ள தேசிய மேலாண்மை கல்வி மையத்தில், எம்.பி.ஏ. பட்டம் பெற்றதாக, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒரே ஆண்டில், எந்த கல்வி மையமும், எம்.பி.ஏ. பட்டம் வழங்காது.
 
எனவே, 12ஆம் வகுப்பு மட்டும் முடித்து, எம்.பி.ஏ. பட்டம் பெற்றதாக பொய் கூறுகிறார். எனவே, இவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பர்சு கோக்லானி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் படேல் தலைமையிலான, டிவிஷன் பெஞ்ச், அமைச்சர் சங்கர் சவுத்ரி மற்றும் குஜராத் மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.