1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (16:10 IST)

குஜராத்தில் யோகா கட்டாய பாடம்; அம்பானி குறித்தும் பாடத்திட்டம்

குஜராத் மாநிலத்தில் வருகிற 2016ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க அரசு திட்டம் மிட்டு உள்ளது.
 

 
குஜராத் மாநில அரசு முதன் முதலில் 9ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் வரை கட்டாய பாடமாக கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள 15 ஆயிரம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2016-ம் ஆண்டு முதல் யோகா பாடம் நடத்தப்பட உள்ளது.
 
மேலும் இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையில் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அப்போது அவர்களுக்கு யோகாவில் உள்ள பல ஆசனங்கள் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்படும்.
 
மேலும் தொழில் அதிபர்கள் திருபாய் அம்பானி, நான்ஜி மேத்தா பற்றிய பாடங்களையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி கடந்த வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சாதஸ்மா தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 
இது குறித்து இறுதி முடிவு விரைவில் கல்விக்குழு எடுக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டு நரேந்திர மோடி குறித்து பள்ளிகளில் பாடத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது திட்டத்தை அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.