வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 22 நவம்பர் 2015 (14:39 IST)

கடனை செலுத்த தவறிய கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம்

8 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்த தவறியதால் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் வரும் 7ஆம் தேதி இணையதளம் வழியாக ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.


 
 
கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்த தவறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்நிறுவனம் கடன் வாங்கும் போது பிணையாக வைத்த சொத்துக்களை ஏலத்தில் விடப்படுவதாக வங்கிகள் அறிவித்துள்ளது.
 
இந்த ஏலத்தை கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 வங்கிகள் கொண்ட அமைப்பு நடத்துகிறது.
 
 
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கி கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதிச் சிக்கல்கள் காரணமாக 2013ஆம் ஆண்டுடன் சேவையை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.