வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (07:09 IST)

''மணமகன் தேவை'' விளம்பரம் தயாரித்த இந்துஜா

தானே ''மணமகன் தேவை'' விளம்பரம் தயாரித்த பெண்

பெங்களூரில் வசிக்கும் சேலத்தைச் சேர்ந்த 24வயதான இந்துஜாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் கொடுத்த மணமகன் தேவை என்கிற விளம்பர விவரங்கள் இந்துஜாவுக்கு பிடிக்கவில்லை.
 
அதனால் அவரே தனக்கு என்ன மாதிரியான மணமகன் தேவை என்றும் தான் எப்படிப்பட்டவர் என்றும் ஒரு மணமகன் தேவை விளம்பரத்தை தயாரித்து, தனது வலைப்பூவில் அதனைப் பதிவேற்றியிருந்தார். அந்த வித்தியாசமான விளம்பரம் இணையத்தில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
இது 24வயதான இந்துஜா பிள்ளையின் கதை. அவர் கண்ணாடி அணிந்தால் முட்டால் போல இருப்பாராம். தனக்கு இப்போதைக்கு குழந்தைகள் தேவையில்லை என்று கூறும் மணமகன்தான் தேவை என்பது போன்ற வித்தியாசமான கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு விளம்பரத்தை அவர் வெளியிட்டுள்ளார். அவரது பெற்றோர் பதிவு செய்திருந்த விளம்பரம் பிடிக்காததால், அவர் தானாகவே சுயமாக தயாரித்து வெளியிட்ட விளப்பரத்தை பார்த்து அவரை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்து பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விபரங்கள் குறித்து அவர் பின்வருமாறு விளக்கியிருந்தார்.
 
நான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பெற்றோர் விரும்பினர்
எனக்கு மணமகன் தேவை என்று எனது பெற்றோர் ஒரு இணையத்தளத்தில் வெலியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்தேன். அதில் இருந்த தகவல்கள் என்னை பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதானே ஒழிய, அவை உண்மையாக என்னை பற்றிய சரியான தகவல்கள் அல்ல. நான் ஒரு மென்பொருள் பொறியாளர் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
 
ஆனால் உண்மையில் நான் புதிதாக தொடங்கும் நிறுவனங்களுடனும் சிறிய நிறுவனங்களுடனும் பணிப்புரிகிறேன். இந்தியாவில் உள்ள எல்லா பெற்றோரையும் போல என் பெற்றோரும் எனக்கு மாப்பிள்ளை தேடுவது தவறல்ல. ஆனால் அவர்கள் கொடுத்த விளம்பரத்தில் உண்மை இல்லை என்பதால் அந்த விளம்பரத்தை நான் நிறுத்தச் சொல்லிவிட்டேன்.


 
என்னுடைய விருப்பு வெறுப்புகள், மத நம்பிக்கைகள் மற்றும் என்னுடைய பொழுதுபோக்குகள் பற்றி என் பெற்றோர் அதில் குறிப்பிடவில்லை. நான் மது அருந்த மாட்டேன். புகைப்பிடிக்க மாட்டேன். முட்டை சாப்பிடுவேன். அசைவம் அல்ல. பாடப்பிடிக்கும். ஆடப்பிடிக்கும். கண்ணாடி அணிவேன். அதில் முட்டாள் போலத் தெரிவேன். நிறைய செலவழிக்கமாட்டேன். புத்தகங்கள் படிக்கமாட்டேன். நான் ஒரு சராசரிப் பெண் அல்ல. நிச்சயமாக திருமணம் செய்துகொள்ள தகுந்த பெண்ணாக நான் என்னை பார்க்கவில்லை. என்றைக்கும் நீண்ட முடி வளர்க்க மாட்டேன். நான் வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பேன் என்ற சத்தியத்துடன் வருவேன்.
 
நான் தேடும் மணமகன்

தாடியுடன் இருந்தால் பிடிக்கும். உலகை சுற்றிப்பார்க்க ஆர்வம் இருக்க வேண்டும். தனக்கு தேவையானதை அவரே சம்பாதிக்க வேண்டும். தான் செய்யும் பணியை விரும்புபவராக இருக்க வேண்டும். தனது பெற்றோருடன் நெகிழ்வாக இருக்க வேண்டும். ஆனால் குடும்பத்துடனேயே ஒட்டியிருக்கும் ஆண் அல்ல. பிள்ளைகளை விரும்பாதவருக்கு அதிக முன்னுரிமை உண்டு. நல்ல குரலும் வசீகரமிக்க ஆளுமையும் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்தது 30 நிமிடங்களாவது ஒரு உரையாடலில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.
 
இந்துஜாவை திருமணம் செய்துகொள்ள யார் தயார்?
 
நான் அதிக பதில் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பெப்ரவரி மாதத்திலிருந்து பலர் பதிலளித்துள்ளனர். ஒருவர் தனது தந்தையுடன் வாட்ஸாப் மூலம் என்னை பற்றி அவர் பேசியதை எனக்கு அனுப்பிவைத்தார். தனக்கு ஏற்ற பெண்ணாக என்னை பார்ப்பதாக அவரது தந்தைக்கு அவர் எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்த அவரது தந்தை, ‘எல்லாம் சரி, நிஜத்தில் இதெல்லாம் சாத்தியமா’ என்று கேட்டிருந்தார்.
 
உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பெண்கள் அனுப்பியிருந்த பதில்கள் என்னை பிரம்மிக்கவைத்தன. என்னை தைரியமான பெண்ணாகவும் ஒரு முன்னோடியாகவும் அவர்கள் பார்த்தனர். நாம் உண்மையில் யார் என்பதை வெளிப்படையாக பேச வேண்டும் என்று மட்டும் தான் நான் நினைத்தேன்.
 
இந்துஜா தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கு கேட்கலாம்.