வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2014 (21:12 IST)

நோக்கியா மூடும் விவகாரம் மத்திய அமைச்சர் விளக்கம்

நோக்கியா தொழிற்சாலை மூடப்படும் விவகாரம் குறித்து ஆராயப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
 
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2005 ஆம் ஆண்டு நோக்கியா செல்போன் தயாரிக்கும் கம்பெனி தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிறுவனம் வரி செலுத்துவது தொடர்பான பிரச்சனையில் சிக்கியது.
 
இதைத் தொடர்ந்து இந்த கம்பெனியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதாக அறிவித்து அதற்கான ஒப்பந்தமும் போட்டது. இதற்கிடையே,  ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரத்து செய்துவிட்டதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், கம்பெனியை வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் மூடப்படும் என்று நோக்கியா அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, நோக்கியா கம்பெனியின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து அரசு ஆராயும். இந்த பிரச்சனை ஒரு குறிப்பிட்ட கம்பெனியை பொறுத்தது என்றார்.