வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 4 மே 2015 (12:10 IST)

நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது நதிநீர் போக்குவரத்து மசோதா

நாடாளுமன்றத்தில் நதிநீர் போக்குவரத்து மசோதா மே 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:-
 
நாடு முழுவதும் உள்ள நதிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
 
இதனை கருத்தில்கொண்டு, நாட்டில் உள்ள 101 நதிகளை மேம்படுத்தும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தில் நதிநீர் போக்குவரத்து மசோதா மே 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்.
 
நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவிற்கு ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளது. இதனை போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் முழுமையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், தேவையான சாத்தியக் கூறுகளை மிகவும் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்.
 
நதி நீர் போக்குவரத்து மூலம் விவசாயதிற்கு தேவையான பாசனம் மட்டும் இன்றி, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் ஆகும் செலவை விட  மிகவும் குறைவாக இருக்கும் என்றார்.