வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2014 (12:02 IST)

சில்லறை விற்பனை மையங்களில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை

சில்லறை விற்பனை மையங்களில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ரெகுலேடர்களுடனோ அல்லது ரெகுலேடர் இல்லாமலோ விற்பனைக்குக் கிடைக்கும் என்று மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயுத் துறையின் இணை அமைச்சர் தர்மேந்திரா தெரிவித்துள்ளார்.
 
அதே போல நுகர்வோர் வசதிக்காக 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எல்பிஜி (LPG) விநியோகிஸ்தர்கள் மையங்கள் மற்றும் மளிகை கடைகளிலும் கிடைக்கும். 17.7.2014-இன்படி சென்னை, பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராய்பூர், சண்டிகர், சில்வாசா, சூரத், வடோதரா, ராஜ்கோட், பவநகர், அகமதாபாத், தலாஜா, அம்பாலா, பரிதாபாத், குர்கான், பஞ்குலா, ஜம்மு, கொச்சி, கோழிகோடு, திருவனந்தபுரம், நாக்பூர், நேவிமும்பை, பூனே, போபால், இண்டுர், ஜபல்பூர், புவனேஷ்வர், கட்டக், ஜச்பூர், அமிர்தசரஸ், ஜலந்தார், லூதியானா, பட்டியாலா, பிகேனர், ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பீடப்பள்ளி, ராமகுடம், வாரங்கல், டேராடூன், ஹரித்துவார், அலகாபாத், பான்சி, பைசாபாத், கொரக்பூர், நோய்டா, கிரேட்டர் நோய்டா, லக்னோ, மத்துரா, கோவா, மீரட் ஆகிய இடங்களில் இந்தத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. 
 
இத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இலவச வர்த்தக எல்.பி.ஜி (பிரி ட்ரேட் எல்.பி.ஜி) என்று அழைக்கப்படும். முதல் விற்பனையின் பொழுது உபகரணத்தின் விலை, தற்போதுள்ள 5 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை மற்றும் நிர்வாக கட்டணங்களும் வசூலிக்கப்படும். அடுத்த முறை விற்பனையின் போது, சமையல் எரிவாயு நிரப்புவதற்கான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
 
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திரா தெரிவித்துள்ளார்.