வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 18 நவம்பர் 2014 (16:21 IST)

மீண்டும் கிசான் விகாஸ் பத்திரங்கள் - 100 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்

சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், கிசான் விகாஸ் பத்திரங்களை மத்திய அரசு, இன்று மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இன்று நடைபெற்ற விழாவில் இதனைச் சிறு முதலீட்டாளர்களுக்கு வழங்கினார். 
 
இந்தப் பத்திரத்தின் குறைந்தபட்ச முதலீடு, ஆயிரம் ரூபாயாக இருக்கும். ஆயிரம், 5 ஆயிரம், 10 ஆயிரம், 50 ஆயிரம் என்ற மதிப்புகளில் பத்திரம் கிடைக்கும். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
 
100 மாதங்களில் முதலீடு செய்த தொகை, இரட்டிப்பாகும்.
 
இதில் முதலீடு செய்யப்படும் தொகையை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. ஆனால், இதைப் பிணையாக வைத்துப் பணம் பெற முடியும்.
 
தொடக்கத்தில், அஞ்சல் நிலையங்களில் கிசான் விகாஸ் பத்திரங்கள் கிடைக்கும். படிப்படியாக இதர தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
 
2014 ஜூலை மாதம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு இணங்க, இந்தப் பத்திரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.