வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2015 (08:43 IST)

மதிய உணவு வழங்கப்படாத நாட்களில் மாணவர்களுக்கு அலவன்ஸ் : மத்திய அரசு

அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாத நாட்களில் மாணவர்களுக்கு அலவன்ஸ் வழங்குவது குறித்த புதிய விதிமுறை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது
 

 

 
நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
 
உண்டு உறைவிடப் பள்ளிகளில் மூன்று வேளையும் , அரசுப்பள்ளிகளில் மதியமும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கடந்த 2013 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட  உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ்,  மதிய உணவு வழங்கப்படாத நாட்களில் அதற்கான அலவன்ஸை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்திரவின் முக்கிய அம்சங்கள் 

உணவுப் பொருள் பற்றாக்குறை, எரிபொருள் இல்லாமை, சமையல் ஊழியர்கள் பணிக்கு வாரதது, போன்ற காரணங்களால் மாணவர்களுக்கு அன்று மதிய உணவு வழங்கப்படாவிட்டால், அதற்கான அலவன்ஸைஅடுத்த மாதத்தின் 15-ந்தேதிக்குள் அவர்களுக்கு மாநில அரசு, உணவு பாதுகாப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும்.
 
* மதிய உணவு தரத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரசு உணவு ஆராய்ச்சி கூடங்களில், அங்கீகாரம் பெற்ற சோதனைக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
 
* மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை, மதிய உணவு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். மாதம் ஒரு பள்ளி என தேர்ந்தெடுத்து உணவு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
 
* பள்ளிகளில் உணவு தானியம் இல்லை என்றாலோ, சமையல் செலவுக்கு பணம் இல்லை என்றாலோ பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் உள்ள பிற நிதிகளை பயன்படுத்திக்கொள்ள அதிகாரம் அளிக்கப்படுகிறது. பின்னர் மதிய உணவு நிதி வந்தவுடன் அதில் இருந்து செலவு செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.