வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:07 IST)

நாடு முழுவதும் இலவச வைபை வழங்க தானாக முன்வந்த கூகுள்

இந்தியாவில் கூகுள் ஸ்டேஷன் என்ற கட்டமைப்பின் மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச வைபை வசதியை வழங்க உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


 

 
பிரபல கூகுள் நிறுவனம் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. அதை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இணை இயக்குனர் சீஷர் சென்குப்தா கூறியதாவது:-
 
கூகுள் நிறுவனம் இன்று தனது முதல் கூகுள் ஸ்டேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடுகின்றன இடங்களில் இலவச வைபை வழங்கப்படும்.
 
ரயில்வேயின் ‘ரயில்டெல்’ நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 52 ரயில் நிலையங்களில் இலவச வைபை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.