உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு


Caston| Last Modified புதன், 20 ஜூலை 2016 (10:07 IST)
உலகின் 10 கிரிமினல் (Top 10 criminals in the world) என ஆங்கிலத்தில் கூகுளில் டைப் செய்து தேடினால் அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் முதல் 10 இடங்களில் இடம் பெறுகிறது.

 
 
இந்த பிரச்சனை பல மாதங்களுக்கு முன்னர் எழுந்தது. இது தொடர்பாக வழக்கறிஞர் சுசில்குமார் மிஸ்ரா கூகுள் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி அதனை நீக்க வலியுறுத்தி இருந்தார்.


 
 
ஆனால் கூகுள் நிர்வாகம் பிரதமர் மோடியின் படத்தை அதில் இருந்து நீக்கவில்லை. அவரது கடிதத்திற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது வரை அந்த பட்டியலில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது.
 
இதனையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுசில்குமார் மிஸ்ரா மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் கூகுள் மீதும், சி.இ.ஓ மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :