வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 31 மே 2017 (13:08 IST)

இனி பிளாஸ்டி பேக் பயன்படுத்தினால் ரூ.5,000 அபராதம்!!

ஜூலை மாதம் முதல் கோவாவில் பிளாஸ்டிக் பேக் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு உத்தரவிடப்பட்டுள்ளது.


 
 
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு முற்றிலும் இயற்கையான பொருட்களின் பயன்பாட்டை கோவா மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. 
 
கோவா கடற்கரை நகரம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் கோவா வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பிளஸ்டிக் சுற்றுப்புற சீர்கேடை ஏற்படுத்தியுள்ளது.
 
என்வே, இதை தவிர்க்கும் வகையில் வரும் ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திட கோவா அரசு தடை விதித்துள்ளது. மீறினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.