50 பேருக்கும் மேல் கற்பழிக்கப்பட்ட சிறுமி - நடிகர்களுக்கும் தொடர்பு?


Murugan| Last Modified புதன், 9 ஆகஸ்ட் 2017 (13:44 IST)
கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் விபச்சார கும்பலிடம் சிக்கி, பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

 
சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குத்திக்காடு எனும் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் விஷ்ணுசாகர்(28) என்ற வாலிபர் தன்னை காதலித்ததாகவும் மேலும், ஆசை வார்த்தை கூறி தன்னை பலமுறை கற்பழித்ததால், தற்போது தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், ஆனால், அவர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறியிருந்தார்.
 
இதுபற்றி போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே தெரியவந்துள்ளது. 
 
புகார் கொடுத்த சிறுமியின் வறுமையை பயன்படுத்தி, அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகலா (40) என்ற பெண், பண ஆசை காட்டி, அந்த சிறுமியை கடந்த 2 வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். 50 பேருக்கும் மேல் அந்த சிறுமியை சீரழித்துள்ளதாக தெரிகிறது. ஸ்ரீகலாவிற்கு உடந்தையாக ஆட்டோ ஓடினர்கள் மூன்று பேர் செயல்பட்டுள்ளனர். 
 
அவர்கள் அந்த சிறுமியை விபச்சாரத்திற்காக பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளனர். மேலும், ஆட்டோவில் வைத்தே அந்த சிறுமியை பலமுறை தங்கள் இச்சைக்கும் பயன்படுத்தியுள்ளனர். அந்நிலையில், விஷ்ணு சாகரும் விபச்சாரத்திற்கு அந்த சிறுமியிடம் சென்றுள்ளார். அடிக்கடி சிறுமியிடம் அவர் சென்றதால் அவர்களுக்கிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்தான், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். எனவே, அந்த சிறுமியை விஷ்ணுசாகரின் தலையில் கட்டவே, இந்த புகார் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து விபச்சார கும்பலை சேர்ந்த ஸ்ரீகலா மற்றும் அந்த 3 ஆட்டோ ஓட்டுனர்களையும் போலீசார் கைது செய்தனர். இதில், சின்னத்திரை நடிகர்கள் சிலரும் விபச்சாரத்திற்காக சிறுமியை தேடி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :