Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருமணம் முடிந்து 7 நாளில் மனைவி 8 மாத கர்ப்பம் - மணமகன் அதிர்ச்சி


Murugan| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (12:55 IST)
திருமணம் ஆகி 7வது நாளில் ஒரு பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் காசலகெரே கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேஷ்(30). இவருக்கும் பிந்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 8ம் தேதி திருமணம் நடந்துள்ளது.  அதன் பின் மணமகன் வீட்டில் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால், கடந்த 15ம் தேதி அந்த பெண்ணிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போதுதான், அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு வெங்கடேஷும், அவரின் குடும்பத்தாரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். 
 
எனவே, அப்பெண்ணின் பெற்றோர்கள் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டனர் என வெங்கடேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், அந்த பெண், திருமணத்திற்கு முன்பே ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவர் மூலமாகவே கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், 8 மாத கர்ப்பத்தை மறைத்து தனது பெற்றோர்தான் வெங்கடேஷுக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்ததாக அப்பெண் கூறியுள்ளார். 
 
இந்த விவகாரம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :