மணமகனின் பிறப்புறுப்பை துண்டித்து எடுத்து சென்ற மர்ம நபர்கள்!

Last Updated: சனி, 3 பிப்ரவரி 2018 (16:08 IST)
மத்திய பிரதேசத்தில் 25 வயதான இளைஞரின் பிறப்புறுப்பை மர்ம நபர்கல் துண்டுத்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு இன்னும் மூன்றி நாட்களில் திருமணம் நடக்கவுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இளைஞர் ஒருவருக்கு, பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் திருமணமாக உள்ள இளைஞரின் பிறப்புறுப்பை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.


மலம் கழிப்பதற்காக அருகிலிருந்த ஆற்றுப்பகுதிக்கு சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத இரண்டு பேர் தாக்கியுள்ளனர். பின்னர், அவரின் பிறப்புறுப்பை, துண்டித்து எடுத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை யார் செய்தது எனவும், அதற்கான காரணம் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :