வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 10 ஜூலை 2014 (16:23 IST)

மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு

நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்ந்துள்ளது.
தனி நபர் வரியற்ற வருமானம் ரூ.2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.
 
வரிச்சலுகைக்கான முதலீட்டு வரம்பு வருடத்திற்கு 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 
 
வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கான சலுகை 1.5 இலட்சத்திலிருந்து 2 இலட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.