வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (10:42 IST)

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நினைவுநாள் அனுசரிப்பதா?: தருண் கோகாய் கண்டனம்

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நினைவுநாள் அனுசரிக்கப்படுவதற்கு அசாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாய்கடும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து தருண் கோகாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
அடிமைத்தனத்தில் இருந்து இந்தியாவை விடுதலை செய்ய அனைத்தையும் தியாகம் செய்தவரை சுட்டுக்கொன்ற கோட்சேவை மெச்சிப் புகழ்ந்து, அவருக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருவது மிகவும் கொடூரமான, வெறுக்கத்தக்க செயல்.
 
நாம் இன்று சுவாசிக்கும் சுதந்திரக் காற்று மகாத்மா காந்தியின் உச்ச பட்ச தியாகத்தினால் நமக்கு கிடைத்ததாகும். மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தையும், சகிப்புத் தன்மையையும், கோட்பாடுகளையும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில் சொந்த நாட்டிலேயே அவர் இழிவுபடுத்தப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் கண்டு பிரதமர் நரேந்திர மோடியும், அசாம் மாநில பாஜக வினரும் மவுனம் காத்து வருவது ஆச்சரியம் அளிக்கும் செயலாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.