ஒபாமா எழுதிய காந்தி பற்றிய குறிப்பு.. வைரலாகும் புகைப்படம்
டிரம்ப் இந்தியா வந்துள்ள நிலையில், ஒபாமா எழுதிய காந்தி பற்றிய குறிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டதை அடுத்து, உலகின் மிக பிரம்மாண்டமான ஸ்டேடியமான அகமதாபாத்தின் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டிரம்ப் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தாஜ் மஹாலை காண ஆக்ரா சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காந்தியின் நினைவிடத்திற்கு வந்தபோது காந்தி குறித்து எழுதிய குறிப்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “ஜூனியர் மார்டின் லூதர் கிங் சொன்னது இன்றும் உண்மையாக உள்ளது. காந்திய உணர்வு இந்தியாவில் இன்றும் உயிரோடு உள்ளது. அது உலகிற்கு பெரிய பரிசாக உள்ளது. எல்லா தேசங்கள் மற்றும் எல்லா மக்களிடையேயும் எப்போதும் நாம் அன்பு மற்றும் அமைதியின் உணர்வைப் பகிர்ந்துக்கொண்டு வாழ்வோம்” என கூறியுள்ளார்.