1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (14:42 IST)

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

3 மாத காலமாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் மத்திய அரசு  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


 
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரி,ஆசிய அளவில் மிகப் பிரசித்தம்.

இந்தக் கல்லூரியின் முதல்வராக தொலைக்காட்சி நடிகரும் பா.ஜ.க. பிரபலமுமான  கஜேந்திர சவுகான் என்பவரை  மத்திய அரசு  அண்மையில் நியமித்தது.  ஆனால் சவுகானின் நியமனத்துக்கு  எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்,  அவரை உடனே மாற்றக்கோரி 3 மாதத்திற்கும் மேலாக தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் செவ்வாய் கிழமை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சகம் நேற்று (திங்கள்)  தெரிவித்தது.

இதனிடையே மாணவர் பிரதிநிதிகளுடன் டெல்லியில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.