1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 மார்ச் 2016 (16:02 IST)

விஜய் மல்லையா மீது புதிய வழக்கு: அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை

விஜய் மல்லையா மீது புதிய வழக்கு: அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை

வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் ஏய்த்து வருவதால் பாரத வங்கி அவரை கைது செய்து பாஸ்போர்ட்டை முடக்க முயற்சி செய்து வரும் வேளையில் அவர் மீது அமலாக்க இயக்குனரகம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விரைவில் விசாரிக்க உள்ளது.


 
 
ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடியை போல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க அமலாக்க இயக்குனரகம் “கிங் ஆஃப் குட் டைம்ஸ்” நிறுவனத்தின் மீது பூர்வாங்க நடவடிகையை தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் அமலாக்கத் துறையின் புலனாய்வு அமைப்பு வெளிநாடுகளில் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
 
கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி அளித்த மனுவின் அடிப்படையில் கடன் மீட்பு தீர்ப்பாயம் இன்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சாதகமான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
விஜய் மல்லையாவுக்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமலாக்கத் துறையின் இந்த திடீர் நடவடிக்கை மல்லையா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.