செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (08:09 IST)

வெங்காயம் இலவசம்! பொதுமக்கள் மகிழ்ச்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த மே மாதம் வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.


 
இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கபட்டனர். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஷிவ்ராஜ்சிங் சவுகான், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.6க்கு கொள்முதல் செய்து கிட்டங்கிகளில் இருப்பு வைக்கச்செய்தார். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து சுமார் 10.4 லட்சம் குவிண்டால் வெங்காயம் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

கிட்டங்கிக்குள் ஏற்பட்ட அதிக வெப்பத்தால் 3.28லட்சம் குவிண்டால் வெங்காயம் அழுகி வீணாகி விட்டது. அதன் மதிப்பு ரூ.30கோடி ஆகும். அதனால், மீதம் உள்ள வெங்காயமும் வீணாவதற்கு முன்பு அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு அரசு செய்துள்ளது. இதில் பொதுமக்களிடம் இருந்து போக்குவரத்துக்காக மட்டும் கிலோவுக்கு ரூ.1மட்டும் வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.