வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (01:01 IST)

நாராயணசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
 

 
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி பைப் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 
இந்த வழக்கில், தமிழர் விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம், தங்கராசு, தமிழரசன், கார்த்திக் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு  விசாரனை புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த பைப் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து நாராயண சாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் நாராயணசாமிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு விலக்கி கொண்டுள்ளது. ஆனால், புதுச்சேரி மாநில போலீசாரின் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.