வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 30 ஜூலை 2015 (00:44 IST)

அரசு கார் கேட்டு அடம் பிடித்த முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

தனது சொந்த பயன்பாட்டுக்கு அரசு கார் வழங்க வேண்டும் என்று, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மகாராஷ்டிரா மாநிலத்தில், புனேவில் வசித்து வருகிறார் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல். இவர், தனது சொந்த பயன்பாட்டுக்கு அரசு கார் வழங்க வேண்டும் என்று உள்ளதுறை அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
புனேவிற்கு வெளியே பயணம் செய்யும் போது தனக்கு அரசு கார் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். தனக்கென சொந்தமாக ஒரு அரசுக் கார் வேண்டும். மேலும், தான் சொந்தக் காரையும் பயன்படுத்தும் போது, அதற்குரிய எரிபொருள் செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

பிரதீபா பாட்டீல் சொந்த வாகனத்தின் பெட்ரோல் பில்லை அரசு கட்டும் நிலையில், அவரது இந்த கோரிக்கை, விதிமுறையை மீறியதாம். இதற்கு மராட்டிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், அரசு கார் அல்லது பெட்ரோல் மானியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தான் பிரதீபா பாட்டீல் பெற முடியும், இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியாது என்று அரசு தரப்பு சட்டவிதிகளை சுட்டிக்காட்டி கூறுகிறது. இதனால், பிரதீபா பாட்டிலின் அடுத்த கட்ட நிலைப்பாடு என்ன நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்த போதிலும், அன்று முதல் இன்று வரை மிகவும் எளிமையாக வாழ்ந்து, பலரது பாராட்டை பெற்ற அப்துல் கலாம் மறைந்த இந்த தருணத்தில், பிரதீபா பாட்டீல் கோரிக்கை பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.