வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 23 அக்டோபர் 2014 (13:59 IST)

கலாஷேத்ராவின் புதிய தலைவராக என்.கோபால்சுவாமி நியமனம்

சென்னையில் உள்ள, கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சுவாமியை, மத்திய அரசு நியமித்துள்ளது. இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவராக இருந்த, கோபாலகிருஷ்ண காந்தி, 2014 மே, 21இல், பதவி விலகினார். அவரின் பதவி விலகல், ஜூன், 3இல் ஏற்கப்பட்டது. அதையடுத்து, இந்த பதவிக்கு, என்.கோபால்சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்; இந்தப் பொறுப்பில் அவர் 5 ஆண்டுகளுக்குத் தொடர்வார். 
 
இதற்கான உத்தரவை, மத்திய கலாசாரத் துறை பிறப்பித்துள்ளது.
 
1966 ஆண்டு தேர்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான என்.கோபால்சுவாமி, 2006 - 2009 வரை தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி வகித்தவர். வாய்மொழியாகக் கற்பிக்கப்படும் சாம வேதத்தைப் பாதுகாக்க, யுனெஸ்கோ ரூ.5 கோடியை நிதி ஒதுக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.