செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2016 (22:03 IST)

மின்னணு முறையில் பணம் செலுத்தினால் அதிரடி சலுகை

ரொக்க பணமின்றி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இ-வாலட் மூலமாக செலுத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்ற மின்னணு பரிமாற்றம் வழிவகுக்கும் என்றும், ரொக்க பணமின்றி மின்னணு முறையில் பணம் செலுத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது;-
 
பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 0.75 சதவீதம் சலுகை. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது 2,000 ரூபாய்க்கு குறைவான தொகைக்கு சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ். மாத சீசன் டிக்கெட்டுக்கு 0.5 சதவீதம் சலுகை, என்று தெரிவித்துள்ளார்.