வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 28 மே 2015 (03:56 IST)

அந்தரத்தில் பறக்கும் வேற்றுகிரவாசிகள் - அச்சத்தில் ஆந்திர மக்கள்

ஆந்திர மாநிலத்தில், நள்ளிரவு நேரங்களில் மனித வடிவில் வேற்றுகிரகவாசிகள் ஜோடி ஜோடியாக வானில் பறப்பதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


 
 
ஆந்திராவில், நெல்லூர் மாவட்டம், சந்திரபாபுகாலனி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில், அதுவும் குறிப்பாக 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறக்கின்றதாம்.
 
இந்த உருவங்களுக்கு கைகள் இல்லையாம். அதற்கு பதில் 2 வெள்ளி போன்ற இறக்கைகள் பளீர் வெண்மை நிறத்தில் உள்ளதாம். கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல மிக நீளமாக உள்ளனவாம். 
 
இந்த உருவங்கள், இரவு நேரங்களில் மட்டும் தரையை நோக்கி பறந்து வந்த பின்பு  மீண்டும் வானை நோக்கி சென்று விடுகின்றதாம். சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி சில நிமிடங்கள் குரல் எழுப்புகின்றதாம். 
 
அது பெரிய கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அது வேற்று கிரகவாசிகள் என தகவல் வெளியானது.
 
இதனால் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதை அப்பகுதி பொது மக்கள் தவிர்த்துவிட்டார்களாம். மேலும் இரவு 7 மணிக்கே பயனத்தின் காரணமாக வீட்டின் ஜன்னல், கதவுகளை மூடிக் கொள்கிறார்கள். 
 
எனவே, இந்த சம்பவம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் உடனே விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
 கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் கிரேக்க தேவதைகள் போல் இறக்கையுடன் பறந்த மனித உருவங்கள் சிலவற்றை அந்நாட்டை சேர்ந்த போவிஸ்டா என்பவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.