வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 ஜூன் 2018 (13:54 IST)

24 மணி நேரத்தில் ஆபத்து? பெங்களூரில் வெள்ள அபாய எச்சரிக்கை!

தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கர்நாடக வானிலை மையல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கர்நாடகாவில் ஜூன் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை பெய்யும் என்றும் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால், பெங்களூருவின் தாழ்வானப் பகுதிகளான ராஜராஜேஸ்வரி நகர், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் பொம்மனஹல்லி ஆகிய ஐந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கர்நாடக மாநிலத்தின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.