வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (13:41 IST)

வாடிக்கையாளரின் தகவல்கள் உறுதி செய்யப்பட்டபின்பே பொருட்கள் விற்பனை

வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி செய்த பின்னரே பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று  பிரபல இணையதள விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடைகளுக்கு சென்று விருப்பமான பொருட்களை வாங்குகின்ற காலம் மலையேறி தற்போது இணையதளம் மூலம் பொருட்களை வாங்கும் கலாச்சாரம் நம்மிடையே வியாபித்துள்ளது. நேர விரயத்தை குறைக்கும் இந்த விற்பனை கலாச்சாரம், பட்டி தொட்டி வரை ஹிட்டடித்துள்ளது.

இணையதளம் மூலம் பொருட்கள் விற்பனை செய்ய தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த செயலியில், ருட்களை வேண்டுவோர் தங்களது பெயர் முகவரி தொலைபேசி எண்களை அளித்தாலே  போதும் பொருட்கள் சில வேலை தினங்களில்  வீடு தேடி வரும்.வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் பொருட்கள் பெறுவதில் சில மாற்றங்களை செய்ய பிரபல இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், ஸ்னேப் டீல் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.  அதன் படி வாடிக்கையாளர் அளிக்கும் தகவல்கள் இனி உறுதி செய்யப்பட்ட பின்பே பொருட்கள் அனுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.