Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளம்பெண்ணை மோட்டாரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்கார முயற்சி - 5 பேர் கைது


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 5 ஜனவரி 2017 (18:41 IST)
இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பெங்களூரு பானசவாடி காவல் எல்லைக்கு உட்பட்ட கம்மனஹள்ளி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தனது தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு அதிகாலை 2.30 மணியளவில் வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று நடுரோட்டில் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை அங்கிருந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றனர். ஆனால் அந்த பெண் கூட்டலிட்டதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்காத நிலையில், ஒருவரின் வீட்டின் முன்பக்க சுவரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் இச்சம்பவம் பதிவாகி உள்ளது. இதைத்கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த வீடியோவில் இளம்பெண்ணை, மர்ம நபர்கள் கடத்த முயன்றபோது மோட்டார் சைக்கிளில் பாதிக்கப்பட்ட பெண் உட்கார மறுத்ததால், அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.

இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :