வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 1 மே 2017 (17:48 IST)

ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து கணவன், மணைவி இருவரும் நீதிமன்றம் வராத முடியாத காரணத்தினால் ஸ்கைப் வீடியோ கால் மூலம் புனே நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.


 

 
காதல் திருமணம் செய்துக்கொண்ட புனே தம்பதியினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்துக் கோரி புனே குடும்பநல நீதிமன்ற மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மூத்த சிவில் நீதிபதி வி.எஸ்.மல்கன்பட்டே ரெட்டி முன் விசாரணைக்கு வந்தது.
 
கணவன் - மனைவி இருவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். கணவன் சிங்கப்பூரில் உள்ளார். மனைவி லண்டனில் உள்ளார். இருவரும் பணி காரணமாக புனே நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனது. இதனால் ஸ்கைப் மூலம் விவாகரத்து வழக்கில் ஆஜராக அனுமதி வழங்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ஸ்கைப் மூலம் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. மனைவி லண்டன் செல்லும் முன் புனே நீதிமன்ரத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் விவகரத்து வழங்கப்படுவது இதுவே முதல் முறை.