Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடியின் முதல் தேர்தல் சோதனை: முன் உதாரணமாகும் பஞ்சாப், கோவா


Abimukatheesh| Last Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (17:23 IST)
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லது என்ற அறிவிப்புக்கு பின் பாஜகவின் முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் இன்று தொடங்கியது.

 

 
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பின் நாடு முழுவதும் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் மோடி மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பாஜக அரசின் செயல்பாடுக்கு அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா இல்லையா என்பதற்கான முதல் தேர்தல் சோதனை பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.
 
கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக கட்சிக்கு கிடைக்கப்பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்து பாராளுமன்ற தேர்தலுக்கான செயல்பாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுடன் புதிதாக ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல் நாடு முழுவதும் பெரிய எதிர்ப்பார்ப்பும் நிலவி வருகிறது. 
 
தற்போது வரை பஞ்சாப் மாநிலத்தில் 66 சதவீதமும், கோவா மாநிலத்தில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :