டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி

டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி


Murugan| Last Modified புதன், 2 நவம்பர் 2016 (12:57 IST)
டெல்லியில் உள்ள ஷதாரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 10 மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.

 

 
ஷதாரா பகுதியில் உள்ள மோகன் பார்க்கில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. 
 
இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பு ஒன்றில், இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரெனெ பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
 
அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியாகிவிட்டனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அந்த பகுதியில் ஏராளமான மின்சார ரிக்‌ஷாக்கள் நிறுத்தப்படுவது வழக்கம். அதில் ஒரு ரிக்‌ஷாவில் நேற்று சார்ஜ் ஏறிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :