செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (14:46 IST)

அபராத தொகை ரூ.10 கோடி கட்டவில்லையெனில் சசிகலாவின் சொத்துக்கள் ஜப்தியா?

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவறும் தலா ரூ. 10 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று கடந்த 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 
இதனை தொடர்ந்து 15ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர்,  பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அபராதத் தொகையை இன்னும் சசிகலா தரப்பு கட்டவில்லை என்று  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் அபராதத்தை கட்டிவிட வேண்டும், இல்லையெனில் நீதிமன்றம் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடும்  என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டால் உடனடியாக அது செலுத்தப்படாமல் இருந்தால்  வருவாய் துறை மூலமாக, அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதோடு, குற்றவாளி பெயரில் உள்ள சொத்துக்களை பொது ஏலத்தில் விடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிடும் என்று வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
அபராதம் செலுத்தத் தவறும் போது, வருவாய் துறை மூலமாக வழக்கில் சேர்க்கப்படாத சொத்துக்களும் ஏலத்தில் விடப்படும். அதற்கான உத்தரவு அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். பின்னர் ஏலம் விடப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்படும்.
 
சசிகலா இந்த வழக்கில் சீராய்வு மனு போடுவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை  குறித்தும்  வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.