இப்படியும் நடக்குமா?: 11 வயது சிறுமியை கதற கதற கற்பழித்த கொடூர தந்தை!

இப்படியும் நடக்குமா?: 11 வயது சிறுமியை கதற கதற கற்பழித்த கொடூர தந்தை!


Caston| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (15:10 IST)
சமீப காலமாக பெற்ற மகளையே தந்தைகள் பலாத்காரம் செய்யும் கொடூர சம்பவங்கள் நடந்து வருகிறது. இதே போல் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்து அங்குள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 
 
உத்திரபிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் அவுரங்காபாத்தில் உள்ள டப்பா என்ற கிராமத்தில் 11 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த சிறுமி தனது தந்தையால் கதற கதற கற்பழிக்கப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து அந்த சிறுமி தனக்கு நிகழ்ந்த அந்த கொடூர சம்பவத்தை தனது குடும்பத்தினரிடையேயும், கிராமத்தில் உள்ளவர்களிடையேயும் கூற அவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :