Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மருமகளுடன் சண்டைப்போட்டு மாமனார் தற்கொலை!

மருமகளுடன் சண்டைப்போட்டு மாமனார் தற்கொலை!


Caston| Last Modified செவ்வாய், 27 டிசம்பர் 2016 (10:35 IST)
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மருமகளுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த மாமனார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
தானேவை சேர்ந்தவர் பாபு ஷேக் என்பவர். குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இவர் தனது மகனுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார். திருமணமான முதல் நாளில் இருந்தே மருமகளுக்கும் ஷேக்கின் குடும்பத்திற்கும் சண்டை தொடர்ந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஷேக்குடன் அவரது மருமகள் சண்டைப்போட்டுக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த ஷேக் தனது குடும்பத்தினரிடம் புலம்பியுள்ளார். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது மகனிடன் செல்போனில் வீடியோ எடுப்பது எப்படி என கேட்டுள்ளார் ஷேக்.
 
இதனையடுத்து நேற்று முந்தினம் வீட்டின் உள்புறம் பூட்டப்பட்டிருந்தது, வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஷேக்கின் மகன் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஷேக் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.
 
மேலும் செல்போன் வீடியோ எடுக்கப்பட்ட நிலையிலேயே கிடந்துள்ளது. ஷேக் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது முழுவதும் பதிந்துள்ளது. மேலும் தனது மருமகளும் அவரது அண்ணனும் தனது நடத்தை குறித்து தவறாக பேசி அசிங்கப்படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக ஷேக் வீடியோவில் பேசியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து ஷேக்கின் மகன் தனது மனைவி, மாமனார் மற்றும் மனைவியின் அண்ணன் ஆகியோர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :