Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மகனின் 10 ஆம் வகுப்பு தோல்வியை இனிப்புடன் கொண்டாடிய தந்தை

sweet
Last Modified புதன், 16 மே 2018 (11:50 IST)
மத்தியபிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மகன் 10 ஆம் வகுப்பு தோல்வியடைந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் டிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். இவரது மகன் அன்சு. அன்சு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் நேற்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அன்சு தேர்வாகவில்லை. இதனால் அன்சு கவலையுடன் இருந்தார்.
 
ஆனால் அன்சுவின் தந்தை சுரேந்திரகுமார் வியாஸ், மகனின் 10 ஆம் வகுப்புத் தோல்வியை அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினார். இது அனைவரிடையேயும் ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
 
இதுபற்றி பேசிய அவர், அனைவருக்கும் வாழ்வில் வெற்றி தோல்வி என்பது வரும். தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் அதுவே முடிவல்ல, பல சந்திரப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :