1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 மே 2015 (11:11 IST)

ராகுல்காந்தியை வெளுத்து வாங்கிய சிவசேனா

விவசாயிகள் பிரச்னையில் ராகுல் காந்தி செயல்பாடு வெட்ககேடானது என சிவசேனா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 
 
இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
விவசாயிகளின் வீட்டிற்கே சென்று ஆகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டீ, காபி, ஸ்நாக்ஸ் சாப்பிட்டார், அவர்களின் குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார், விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தினார், சாதாரண பயணி போல் ரயிலில் சென்றார். இவைகள் எல்லாம் ஒரு வெட்ககேடான விஷயம்.
 
மகாராஷ்டிராவில் நிலவிய கடும் வறட்சியினால் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட போது, வேடிக்கை பார்த்த ராகுல் காந்தி, தற்போது விவசாயிகளுக்காக போராடுவது வேடிக்கையானது. 
 
அப்போதும், மகாராஷ்டிராவில், காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது. அன்று, இதே போன்று விவசாயிகள் வீட்ற்கு சென்று தங்கி, டீ, காபி ஸ்நாக்ஸ் போன்றவைகள் சாப்பிட்டு ஆறுதல் கூறியிருக்கலாம்.
 
மேலும், மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து. அப்போதாவது மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்காலம்.
 
அவர்களது கண்ணீரை துடைத்து இருக்கலாம். அதை எல்லாம் ராகுல் காந்தி செய்யவில்லை. இப்போது விவசாயிகள் மீது கரிசனம் காட்டுவது வெட்ககேடான செயலை தவிர வேறு என்ன சொல்வது என வெளுத்து வாங்கியுள்ளது. 
 
விவசாயிகள் பிரச்சனையில், ராகுல் காந்தி மீது சிவசேனா கடும் பாய்ச்சலை எதிர்பாரத காங்ரகிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.