வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 26 டிசம்பர் 2016 (17:23 IST)

ரூ.26 லட்சத்துக்கு போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

குஜராத் மாநிலத்தில் ரூ.26 லட்சம் மதிப்புடைய போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
புதிய 2000 ரூபாய் வெளியான இரண்டாவது நாளே அதன் போலி ரூபாய் நோட்டு வெளியானது. இந்நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் நாடு மூலம் இந்தியாவில் கோடி கணக்கில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதாகவும், இதை தடுக்கவே தற்போது புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
 
ஆனால் பிரதமர் மாநிலமான குஜராத் மாநிலத்தில் இன்று ரூ.26 லட்சம் மதிப்பிளான போலி 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்களை ஏமாற்றும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.