1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (22:44 IST)

போலி இ-மெயில்: வருமான வரித்துறை எச்சரிக்கை

போலி இ-மெயில்: வருமான வரித்துறை எச்சரிக்கை

நாட்டில், வரி செலுத்துவோரை குறிவைத்து, போலி மெயில் உலாவருவதாக வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, வருமானவரித்துறை சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
வருமான வரித்துறை பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி, போலி மின்னஞ்சல்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றி வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்து வண்ணம் உள்ளது. எனவே, அதுபோன்ற மோசடிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
 
எனவே, நாட்டில், வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கு, கடன் அட்டை குறித்து ரகசிய எண்கள் அல்லது கடவுச் சொல் ஆகியவற்றை வருமான வரித்துறை கேட்கவில்லை.
 
இது போன்று ரகசிய விவரங்களைக் கேட்டு வரும் போலி மின்னஞ்சல்களுக்கு யாரும் பதிலளிக்க தேவையில்லை என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.