வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 21 பிப்ரவரி 2015 (17:07 IST)

ஃபேஸ்புக் சேவை இலவசம்; கட்டணத்தை குறைக்க தொலைபேசி நிறுவனங்கள் பரிசீலனை

ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செல்போனில் இலவச இணைய தள வசதியை அறிவித்துள்ளதால், மற்ற தொலைபேசி நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
ஃபேஸ்புக் நிறுவனம் இந்திய செல்போன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அளிக்கவுள்ள இந்த சேவையை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச இணைப்பை வழங்கவுள்ளது.
 
தொடக்கத்தில் 33 வலைத்தளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போட்டியை சமாளிக்க இணைய தள இணைப்புக்கான டேட்டா கட்டணத்தை மற்ற தொலைபேசி நிறுவனங்களும் குறைக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.