வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By abi
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (18:20 IST)

என்னதான் மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் மட்டும் தீராது

பருவ மழைக் காலத்தின் போது 106 சதவிதம் மழை பெய்தாலும் குடிநீர் மட்டும் தீராது என்று வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் பருவ மழைக் காலத்தில் 106% அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, லண்டனில் இருந்து இயங்கும் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு, பருவ மழைக் காலத்தில் 106% அளவுக்கு மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் மட்டும் தீராது என்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து  வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு, கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பெய்யாமல் போனது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது, எனவே இந்தியாவில் உள்ள முக்கியமான நதிகளும், அணைகளும் வறண்டு போய் உள்ளது, என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு வீசிய கடுமையான வெயில், பருவ மழை பெய்யாமல் போனது போன்ற காரணங்களினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின் படி 106% அளவுக்கு மழை பெய்தாலும் குடிநீர் பஞ்சம் மட்டும் தீராது என்றும் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது.