மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்: பிரதமர் மோடி அதிர்ச்சி!

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்: பிரதமர் மோடி அதிர்ச்சி!


Caston| Last Modified வியாழன், 18 மே 2017 (10:16 IST)
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே இன்று காலை காலமானார். அவரது மரணச்செய்தியை கேட்ட பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

 
 
60 வயதான அனில் மாதவ் தவே மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது மரணத்திற்கான காரணம் என்ன? அவருக்கு மருத்துவ உதவிகள் ஏதேனும் அளிக்கப்பட்டதா போன்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
 
இந்நிலையில் மத்திய அமைச்சரின் மரணத்தை கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், திடீரென அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார் என்ற செய்தி தனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அனில் மாதவ் சிறப்பாக மக்கள் சேவை செய்யக்கூடியவர். நேற்று மாலை வரை என்னுடன் பேசிக்கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :