செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (14:02 IST)

தொடரும் ராகிங் கொடுமை: ரயில் முன் பாய்ந்து பொறியியல் மாணவர் தற்கொலை

தெலுங்கானா மாநிலலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் மூத்த மாணவர்களின் ராகிங்கால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த வி.சாய்நாத்(18) என்ற மாணவன் வாராங்கல் மாவட்டத்தில் சி.எம்.ஆர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரை கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த மாணவன் சாய்நாத் தான் அனுபவித்த ராகிங் கொடுமைகளை கடிதத்தில் எழுதியுள்ளார். இதனை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “ரகிங்கை நிறுத்துங்கள்” மேலும் “இந்த நிலமைக்கு காரணம் மூத்த மாணவர்கள் அப்படி செய்திருக்க கூடாது”என்றும் எழுதியுள்ளார். ஆனால் அந்த மாணவர்கள் யார் என்று அந்த குறிப்பில் தெளிவாக இல்லையென இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

நாங்கள் ராகிங் தொடர்பாக எந்த புகாரையும் பெறவில்லை, இருந்தபோதிலும் இந்த மரணத்திற்கு பின்னனி ராகிங்கா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகிறோம் என துணை காவல் ஆணையர் அசோக் குமார்  கூறினார்.