Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

cm
Last Updated: வியாழன், 17 மே 2018 (12:58 IST)
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ஆளுனர் முன்னிலையில் எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார்.
பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
 
நேற்றிரவு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர்.மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என்றனர். எடியூரப்பா ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
 
இந்நிலையில் கர்நாடகாவின் 23வது முதல்ராக எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார். அவருக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :