வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (18:51 IST)

இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு மார்ச் 2013 முடிவில் 292.0 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மார்ச் 2014 முடிவில் 304.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்திருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2014 ஜூலை 9 அன்று, பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.
 
குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணி கையிருப்பினைத் தொடர்ந்து வைத்திருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக நடப்பு கணக்கில் பெருமளவு கையிருப்பு வைத்திருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 
 
பணப் பறிமாற்ற விகிதம் மற்றும் குறிப்பிட்ட விலை மாறாமல் இருக்க, இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் தலையிடும்.