1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 28 மே 2015 (00:51 IST)

பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை - போட்டு உடைத்த மன்மோகன் சிங்

தற்போது நடைபெற்று இருக்கும் பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது போல் மாயதோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், உண்மையில் பொளாதாரம் வளர்ச்சி அடையவில்லை என  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:- 
 
நான் பிரதமராக இந்த காலகட்டத்தில் எனது பதவியை தவறாக பயன்படுத்தியது இல்லை. அந்த பதவி மூலம் என்னையோ அல்லது என் குடும்பத்தையோ வளப்படுத்திக் கொண்டது இல்லை.
 
ஆனால், என்னைப் பற்றியும், காங்கிரஸ் கட்சியின் அரசு பற்றியும் மோசமாக சித்தரிப்பதையே பாஜக அரசு வழக்கமாக கொண்டுள்ளது.
 
எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை, இந்த அரசு வேறு பெயரில்  செயல்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று இருக்கும் பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது போல் மாயதோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், உண்மையில் பொளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. ஏற்றுமதியும் உயரவில்லை. இது தான் உண்மை நிலவம் ஏன்றார். 

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற பிரதிப் பைஜால் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் என்னை மிரட்டினார் என கூறியிருந்தார்.
 
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய போதும் கூட மன்மோகன்சிங் வாய் திறக்கவில்லை. தற்போது பாஜக அரசும் சரி, எத்தனையோ குற்றச்சாட்டு கூறிய போது கூட, அதற்கு  பதில் சொல்லாத மன்மோகன் சிங் தற்போது வாய் திறந்து பதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.