வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2015 (16:07 IST)

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம்: நேபாள தூதர் தகவல்

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் நூற்றுக் கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என்று இந்தியாவுக்கன நேபாள தூதர் தீப் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.


 

 
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டுவில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

சாலைகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது, காலை 11.56 க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காட்மண்டுவிலிருந்து வடமேற்கில் 83 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
 
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என இந்தியாவுக்கன நேபாள தூதர் தீப் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
 
மேலும், நிலநடுக்கத்தால் காத்மண்டு பள்ளத்தாக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.